பாடல் #2074
கல்வாரியில் தொங்கும்
🔤 Kalvaariyil Thongkum
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியில் தொங்கும் இயேசுவைப் பார் கல்மனம் மாற்றியே உன்னை இரட்சிப்பார் மனுமக்களின் பாவ பாரங்கள் மனக்கவலை சுமந்தவரே பரிகரியே பலியானவரே விரித்த கரம் ஆணி பாய்ந்தவரே அறைந்தனரே உமிழ்ந்தனரே அந்தப் பகைஞர் அன்பர் முகத்தில் அழகுமில்லை சௌந்தர்யமில்லை அருமை, இயேசு இந்த கேடடைந்தார் துஷ்ட யூதர்கள் பரிசுத்தரை பலவந்தமாய் நடத்திச் செல்ல நடக்க பலம் இல்லை தள்ளாடினார் நீண்ட சிலுவையில் மலை ஏறினார் சொந்த பந்தங்கள் உன்னை கைவிட்டும் கலங்கிடாதே கர்த்தரண்டை வா உனது பாவங்களை போக்கிடுவார் பரிசுத்தமாய் உன்னை மாற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyil Thongkum Yesuvaip Paar Kalmanam Maarriyae Unnai Iratsippaar Manumakkalin Paava Paaranggal Manakkavalai Sumandhavarae Parigariyae Paliyaanavarae Virittha Karam Aani Paayndhavarae Araindhanarae Umizhndhanarae Andhap Pakainjar Anbar Mugatthil Azhakumillai Saundharyamillai Arumai, Yesu Indha Kaedatainthaar Thushta Yoodharkal Parisuttharai Palavandhamaay Natatthich Sella Natakka Palam Illai Thallaatinaar Neenda Siluvaiyil Malai Aerinaar Sondha Pandhanggal Unnai Kaivittum Kalangkitaathae Karttharantai Vaa Unathu Paavanggalai Pokkituvaar Parisutthamaay Unnai Maarrituvaar