பாடல் #2061
கல்வாரி சிலுவை நாதா
🔤 Kalvaari Siluvai Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி சிலுவை நாதா காரிருள் நீக்கும் தேவா பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) - கல்வாரி மன்னுயிர் மீட்கும் அன்பால் தன் உயிர் மாய்த்தாய் அன்பே மன்பதை மாந்தர் முன்னால் தரணியை இழுத்தாய் நின்பால் (2) - கல்வாரி தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பார் சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) - கல்வாரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Siluvai Naathaa Kaarirul Neekkum Thaevaa Palvinai Palanaam Paavam Purindhavar Emaikkan Paarum (2) - Kalvaari Mannuyir Meetkum Anpaal Than Uyir Maaytthaay Anpae Manbathai Maandhar Munnaal Tharaniyai Izhutthaay Ninpaal (2) - Kalvaari Thooyavan Ninnai Kantor Thee Ullam Thelinthae Nirpaar Saey Ullam Thanthaay Arulaay Vaay Ullam Thanthaen Pugazhaay (2) - Kalvaari