பாடல் #2058
கல்வாரி அழைக்குது
🔤 Kalvaari Azhaikkuthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி அழைக்குது உம்மை-கண்ணீர் சிந்திட வைக்குது எம்மை ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே இயேசு தம்மை சிலுவையிலே கொன்றிட்ட பாவியரை மன்னிக்கவே மன்றாடி ஜெபித்த மனுக்குல தேவா-நின் கருணைக்கு ஈடில்லையே பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் பாவமில்லாத நீர் மரித்ததும் ஏன் பாவிகள் மேல் கொண்ட பாசத்தாலோ கொடுமையின் கோரத்தைச் சகித்தீரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Azhaikkuthu Ummai-kanneer Sinthida Vaikkuthu Emmai Jeeva Paliyaaga Vandha Thaevamaindhanae Paaviyemmai Mannippeero Enggal Theyvamae Yesu Thammai Siluvaiyilae Konritta Paaviyarai Mannikkavae Manraati Jepittha Manukkula Thaevaa-nin Karunaikku Eetillaiyae Paavatthin Sambalam Maranam Enraal Paavamillaadha Neer Maritthathum Aen Paavigal Mael Konda Paasatthaalo Kotumaiyin Koratthaich Sakittheero