பாடல் #20544
சிறுபிள்ளையைப்போல்
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
சிறுபிள்ளையைப்போல் மாறாவிட்டால் பரலோகத்திலே இடமே இல்லை - 2 ஆயிரம் துதித்தாலும் அதிகநேரம் ஜெபித்தாலும் - 2 இருதயம் மாறாவிட்டால் இருப்பதில் ஒன்றும் இல்லை உபவாசம் இருந்தாலும் உறங்காமல் ஜெபித்தாலும் - 2 உள்ளத்தில் உண்மையில்லையே பரலோக நன்மை இல்லையே வெண்ணாடை அணிந்தாலும் வேதத்தை கையில் எடுத்தாலும் - 2 அன்பு உனக்கு இல்லையே.. ஏ உனக்குள் இயேசு இல்லை - 2 ஆவியிலே துதித்தாலும் அன்னியபாஷை பேசினாலும் - 2 மன்னிக்கும் மனம் இல்லையே மன்னிப்பு உனக்கு இல்லையே - 2