பாடல் #2030
கர்த்தாவே இந்தக் காலையில்
🔤 Kartthaavae Indhak Kaalaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தாவே! இந்தக் காலையில் நான் துதி செய்கிறேன். பணிந்து ஜெபம் உம்மண்டை இரந்து செய்கிறேன். 2. என்னை நீதியின் பாதையில் உம் ஆவி நடத்தி என் வேலையைச் சரிவர செய்யப் பெலன் தாரும். 3. உம்மை நேசித்து அஞ்சுவர் வாழ்வடைகின்றனர். வல்ல தேவா என்னைச் சூழக் கேடகமாயிரும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaavae! Indhak Kaalaiyil Naan Thuthi Seykiraen. Paninthu Jebam Ummantai Iranthu Seykiraen. 2. Ennai Neethiyin Paathaiyil Um Aavi Natatthi En Vaelaiyaich Sarivara Seyyap Pelan Thaarum. 3. Ummai Naesitthu Anjsuvar Vaazhvataikindranar. Valla Thaevaa Ennaich Soozhak Kaedakamaayirum.