பாடல் #1984
கர்த்தர் என் ஒளி எனக்கேன் பயம்
🔤 Kartthar En Oli Enakkaen Payam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தர் என் ஒளி எனக்கேன் பயம்? ராப்பகலாய் அவர் என்னருகே அவர் என் ரட்சிப்பு பாவத்தினின்று இப்பாக்கியத்தை ஆவி அளிக்கின்றார். கர்த்தர் என் ஒளி அவர் என் கீதம் ராப்பகல் என்னை நடத்துகின்றார். 2. கர்த்தர் என் ஒளி மேகம் தோன்றினும் விஸ்வாசக் கண்ணால் நான் மேல் நோக்குவேன் மகிமை ஆட்சி செய்யும் இடமது இவ்விருள் உலகம் எனக்கு வேண்டாம். 3. கர்த்தர் என் ஒளி கர்த்தர் என் பெலன் அவர் பெலத்தில் நான் ஜெயம் கொள்வேன் என் பெலவீனம் அவர் மூடுகின்றார் நிமிஷந்தோறும் என்னைத் தாங்குகிறார். 4. கர்த்தர் என் ஒளி என் எல்லாம் அவர் அவர் பார்வையில் இருளேயில்லை அவர் என் மீட்பர் ரட்சகர் என் ராஜா விண்ணோருடன் நான் அவரைத் துதிப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthar En Oli Enakkaen Payam? Raappakalaay Avar Ennarukae Avar En Ratsippu Paavatthininru Ippaakkiyatthai Aavi Alikkinraar. Kartthar En Oli Avar En Keedham Raappakal Ennai Natatthukinraar. 2. Kartthar En Oli Maegam Thonrinum Visvaasak Kannaal Naan Mael Nokkuvaen Makimai Aatsi Seyyum Idamathu Ivvirul Ulakam Enakku Vaentaam. 3. Kartthar En Oli Kartthar En Pelan Avar Pelatthil Naan Jeyam Kolvaen En Pelaveenam Avar Mootukinraar Nimishanthorum Ennaith Thaangkukiraar. 4. Kartthar En Oli En Ellaam Avar Avar Paarvaiyil Irulaeyillai Avar En Meetpar Ratsakar En Raajaa Vinnorudan Naan Avaraith Thuthippaen.