பாடல் #1980
கர்த்தர் இயேசுவில் வேர் ஊன்றுவோம்
🔤 Kartthar Yesuvil Vaer Oonruvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் கன்மலை மீதே கட்டப்படுவோம் விசுவாசத்தில் உறுதி கொள்வோம் நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் - கர்த்தர் பாவம் இல்லாதொரு வாழ்க்கையும் மாயம் இல்லா மனத்தாழ்மையும் - 2 சாந்தம் நீடிய பொறுமையும் - 2 இரக்கம் தயவை தரித்திட - கர்த்தர் வேத வசனத்தால் நிறையவும் தேவ சமாதானம் ஆளவும் பேதங்கள் இன்றி வாழவும் பேரன்பில் வளர்ந்து பெருகிட - கர்த்தர் திருவசனம் எங்கும் கூறவும் திறப்பின் வாசலில் நிற்கவும் இயேசுவின் நுகத்தை ஏற்கவும் வருகையில் மகிமை அடைந்திட - கர்த்தர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Yesuvil Vaeroonruvom Kanmalai Meethae Kattappatuvom Visuvaasatthil Uruthi Kolvom Nanriyaal Ullam Nirainthituvom - Kartthar Paavam Illaathoru Vaazhkkaiyum Maayam Illaa Manatthaazhmaiyum - 2 Saandham Neetiya Porumaiyum - 2 Irakkam Thayavai Tharitthida - Kartthar Vaedha Vasanatthaal Niraiyavum Thaeva Samaathaanam Aalavum Paedhanggal Inri Vaazhavum Paeranpil Valarnthu Perukida - Kartthar Thiruvasanam Engkum Kooravum Thirappin Vaasalil Nirkavum Yesuvin Nugatthai Aerkavum Varukaiyil Makimai Atainthida - Kartthar