பாடல் #198
அப்பாலே போ சாத்தானே
🔤 Appaalae Po Saatthaanae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பாலே போ சாத்தானே பெருமை கொண்டவன் நீதானே தள்ளப்பட்டவன் நீ தானே நான் இருப்பது இயேசுவின் இரத்தக் கோட்டைதான் என்னை நெருங்கினால் நீ போவது பாதாளந்தான் சிலுவையில் உன்னை ஜெயித்தவர் எங்க அப்பாதான் அந்த ஜெயகிறிஸ்து, இயேசுவுக்கு பிள்ளை நானுதான் ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றினாயே - அந்த கனியை காட்டி மோசம் செய்த சாத்தானும் நீயே ஆலயத்திற்கு போகவிடாமல் தடுப்பவன் நீயே எங்க ஆண்டவர் இயேசுவை வணங்கவிடாமல் கெடுப்பவன் நீயே ஜெபிக்கும் போது தூக்கத்தை நீ கொடுப்பவன் தானே பைபிள் படிக்கும் போது மனதை கெடுக்கும் சாத்தான் நீதானே தந்திரமாக நீயும் வேலை செய்கிறே - நீ நினைச்சதொன்றும் நடக்கல்லையே ஏமாந்து போகிறே வியாதிகளை கொண்டுவருபவன் நீதான் சாத்தானே கொடிய வேதனைகளை கொடுப்பவனும் நீதான் சாத்தானே சோதிக்கும் சோதனைக் காரன் நீதான் சாத்தானே சிற்றின்பங்களை தருபவனும் நீதான் சாத்தானே சந்தோஷத்தை கெடுப்பவனும் நீதான் சாத்தானே பல சங்கடங்களை கொண்டு வருபவனும் நீதான் சாத்தானே சாத்தானே உன் ஆயதம் ஒன்றும் பலிக்காதே சர்வவல்லபரின் பிள்ளைகளை ஒன்றும் செய்யாது நாய் படாத பாடுகளை எனக்குத் தந்தாயே நேசர் இயேசுவை மறந்து ஓடுவேன் என்று காத்திருந்தாயே யோபுவை போல துன்பங்களை எனக்குத் தந்தாயே எனக்குள்ளதெல்லாம் எடுத்து நடுத்தெருவில் விட்டாயே இவ்வுலகத்தின் பாடுகள் என்னை எதுவும் செய்யாது இவை இனிவருகின்ற மகிமைக்கு என்றும் ஒப்பாகாது என்னை அழிக்க நினைச்ச சாத்தான் நீதானே உன்னை பாதாளத்திற்கு அனுப்பும் வரை ஒய்ந்திருப்பேனோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaalae Po Saatthaanae Perumai Kondavan Neethaanae Thallappattavan Nee Thaanae Naan Iruppathu Yesuvin Ratthak Kottaithaan Ennai Nerungkinaal Nee Povathu Paathaalanthaan Siluvaiyil Unnai Jeyitthavar Engga Appaathaan Andha Jeyakiristhu, Yesuvukku Pillai Naanuthaan Aathaamaiyum Aevaalaiyum Aemaarrinaayae - Andha Kaniyai Kaatti Mosam Seytha Saatthaanum Neeyae Aalayatthirku Pogavitaamal Thatuppavan Neeyae Engga Aandavar Yesuvai Vananggavitaamal Ketuppavan Neeyae Jepikkum Pothu Thookkatthai Nee Kotuppavan Thaanae Paipil Patikkum Pothu Manathai Ketukkum Saatthaan Neethaanae Thanthiramaaga Neeyum Vaelai Seykirae - Nee Ninaicchathonrum Natakkallaiyae Aemaanthu Pokirae Viyaathigalai Kontuvarubavan Neethaan Saatthaanae Kotiya Vaedhanaigalai Kotuppavanum Neethaan Saatthaanae Sothikkum Sodhanaik Kaaran Neethaan Saatthaanae Sirrinbanggalai Tharubavanum Neethaan Saatthaanae Santhoshatthai Ketuppavanum Neethaan Saatthaanae Pala Sanggatanggalai Kontu Varubavanum Neethaan Saatthaanae Saatthaanae Un Aayatham Onrum Palikkaathae Sarvavallaparin Pillaigalai Onrum Seyyaathu Naay Pataadha Paatugalai Enakkuth Thanthaayae Naesar Yesuvai Maranthu Otuvaen Enru Kaatthirunthaayae Yopuvai Pola Thunbanggalai Enakkuth Thanthaayae Enakkullathellaam Etutthu Natuttheruvil Vittaayae Ivvulakatthin Paatugal Ennai Ethuvum Seyyaathu Ivai Inivarukindra Makimaikku Enrum Oppaakaathu Ennai Azhikka Ninaiccha Saatthaan Neethaanae Unnai Paathaalatthirku Anuppum Varai Oynthiruppaeno