பாடல் #1960
கர்த்தருக்குப் புதுப்பாட்டை
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
கர்த்தருக்குப் புதுப்பாட்டை நாம் பாடுவோம் அவரதிசயங்கள் நாம் சொல்லுவோம் பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம் ஹிட்டாரின் இசையுடன் கைத்தாள ஓசையுடன் ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம் பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம் பூமியின் குடிகளே எல்(N)லாரும் கர்த்தரை கெம்பீரமாகப் பாடிடுங்கள் பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம் கர்த்தர் தம் இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி நீதியை நமக்கு விளங்கச் செய்தாரே பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம்