பாடல் #1950
கர்த்தரின் பந்தியில் வா
🔤 Karttharin Panthiyil Vaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின் ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ? பாவ மனங் கல்லோ? - உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ? தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின் தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு. பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன பந்திதனில் சேரு. சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின் அன்பின் விருந்தாமே - கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே. இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா - கர்த்தரின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Panthiyil Vaa. - Sakodharaa Karttharin Panthiyil Vaa. Kartthar Anpaaych Sondha Ratthatthaich Sinthina Kaaranatthai Manap Pooranamaay Enni - Karttharin Jeeva Appam Allo? - Kiristhuvin Thiruch Sareeram Allo? Paava Manang Kallo? - Unakkaayp Pakirappatta Thallo? Thaeva Kumaaranin Jeeva Appatthai Nee Thinru Avarudan Enrum Pizhaitthida - Karttharin Thaeva Anpaip Paaru - Kiristhuvin Seeshar Kurai Theeru. Paavak Kaettaik Kooru - Raapposana Panthidhanil Saeru. Saavukkuriya Maa Paavamulla Logam Thannil Manam Vaitthu Anniyan Aakaathae - Karttharin Anpin Virunthaamae - Karttharudan Aikyap Panthi Yaamae Thunbam Thuyar Pomae .. Irudhayam Suttha Thidanaamae. Inbam Mikum Thaeva Anpin Virunthukku Aethu Thaamathamum Illaathippothae Vaa - Karttharin