பாடல் #1949
கர்த்தரின் நாள் பயங்கரம்
🔤 Karttharin Naal Payanggaram
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் நாள் பயங்கரம் அந்த நாளை சகிப்பவன் யார்? ஆதலால் நீங்கள் யாவரும் உபவாசித்துப் புலம்புங்கள் வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள் நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும் கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள் கர்த்தருடைய ஊழியரே பலிபீடத்தில் வாருங்கள் திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள் கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரிய காரியம் செய்குவார் தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார் முன்மாரி பின்மாரியையும் நிச்சயமாய்த் தருவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Naal Payanggaram Andha Naalai Sakippavan Yaar? Aadhalaal Neenggal Yaavarum Ubavaasitthup Pulampunggal Vasthiramalla Irudhayatthai Parisutthamae Pannunggal Namathu Ullam Norungkinaalthaan Karttharukkup Piriyamae Muthiyorkalum Kuzhanthaigalum Vaalibarum Sapaiyorum Kootivanthu Yesu Paadham Kaatthirunthu Jepiyunggal Karttharutaiya Oozhiyarae Palipeedatthil Vaarunggal Thirappin Vaasalil Ninrukontu Azhuthu Pulampi Jepiyunggal Kartthar Namathu Thaesatthin Mael Periya kaariyam Seykuvaar Thaesamae Nee Payappataathae Mana Makizhnthu Kalikooru Vaakkutthattham Seytha Devan Munmaariyaip Pozhinthittaar Munmaari Pinmaariyaiyum Nicchayamaayth Tharuvaarae