பாடல் #1935
கருணாகர தேவா
🔤 Karunaagara Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனைக் கா வா. இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல என்றும் ஒளியதாக இலங்கும் மா திரியேக. - கரு 1.சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச் சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து; நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. - கரு 2.நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து நெருங்காமல் நீ எழுந்து, நிலை புரிந்து, சுத்தநெஞ்சோ டமைந்து தூங்க நல் துயில் தந்து, தூதர் காவல் நிறைந்து, துணையாய் என்னோடிருந்து. - கரு 3.தாதா, அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே, என்னைத் தாங்குவதார் பின்னை, சார்வன் நின்னை; வேதா, நான் உன் தொண்டு வினைஞன் என் நிலை கண்டு, மீண்டுன் செட்டைகள் விண்டு விலகா தணைத்துக்கொண்டு. - கரு 4.தீய எண்ணங்கள் பாற, திகில் கனவுகள் மாறத், திவ்ய சிந்தை உள் ஊற, ஸ்திரம் ஏறக், காயம் உயிரும் கூடக், கருத்துன்னோ டுறவாடக், காலை நல்லறம் நாடக், கரிசித்துன் துதி பாட. - கரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaagara Thaevaa, Irangki Indhak Kangkulil Enaik Kaa Vaa. Irulaethum Anukaamal Iravilum Pakalpola Enrum Oliyathaaga Ilangkum Maa Thiriyaega. - Karu 1.sendra Pakalil Kaatthuch Saer Vibatthugal Neetthuch Saertthaiyae Vazhi Paartthuth, Thikil Theertthu; Nanri Yatharkuth Thuthi Navilvan, Nee En Kathi Naatum En Athibathi; Namaskaaram Unakkathi. - Karu 2.nitthiraiyil Utpukunthu, Satthurup Pasaasu Vanthu Nerungkaamal Nee Ezhunthu, Nilai Purinthu, Sutthanenjso Tamainthu Thoongga Nal Thuyil Thanthu, Thoodhar Kaaval Nirainthu, Thunaiyaay Ennotirunthu. - Karu 3.thaathaa, Antinaen Unnaith Thanjjam Neeyae, Ennaith Thaangkuvathaar Pinnai, Saarvan Ninnai; Vaethaa, Naan Un Thontu Vinainjan En Nilai Kantu, Meentun Settaigal Vintu Vilakaa Thanaitthukkontu. - Karu 4.theeya Ennanggal Paara, Thikil Kanavugal Maarath, Thivya Sinthai Ul Oora, Sthiram Aerak, Kaayam Uyirum Koodak, Karutthunno Turavaadak, Kaalai Nallaram Naadak, Karisitthun Thuthi Paada. - Karu