பாடல் #1918
கதிரவன் எழுகின்ற
🔤 Kathiravan Ezhukindra
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே - எழுந்திராய். 2.வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை - நாடுவேன். 3.கடவுளின் வல்லமை, கன மகிமை காணும் இடமதில் செல்வதே - என் இஷ்டம். 4.ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை ஆவலாய் நாடி நான் - போற்றுவேன். 5.ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை நேயமாய்ப் பாடி நான் - உயர்த்துவேன். 6.மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில் கர்த்தரின் செயல்களைச் - சிந்திப்பேன். 7.அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த் தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன். 8.ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர் நேத்திரம் போல் என்னைக் - காக்கிறார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.kathiravan Ezhukindra Kaalaiyil Iraivanaith Thuthi Seyya Manamae - Ezhunthiraay. 2.varantu Thanneerartra Vanam Indhap Puvidhanil Thiranda Thayai Thaevai - Naatuvaen. 3.katavulin Vallamai, Kana Makimai Kaanum Idamathil Selvathae - En Ishtam. 4.jeevanaip Paarkkilum Devanin Kaadhalai Aavalaay Naati Naan - Porruvaen. 5.aayul Pariyandham Aandavar Naamatthai Naeyamaayp Paati Naan - Uyartthuvaen. 6.metthaiyil Raachsaamam Nitthirai Kolkaiyil Karttharin Seyalkalaich - Sinthippaen. 7.allum Pakalum Naan Avar Settaigalin Keezhth Thollaikku Neengkiyae - Othungkuvaen. 8.aatthumam Devanai Antik Kolla Avar Naetthiram Pol Ennaik - Kaakkiraar.