பாடல் #1907
கண்டேன் என் கண்குளிர
🔤 Kantaen En Kankulira
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் - கண் 1. பெத்தலேம் - சத்திர முன்னணையில் உற்றோருக் - குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண் 2. தேவாதி - தேவனை, தேவசேனை ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண் 3. பாவேந்தர் - தேடிவரும் பக்தர் பரனை, ஆரேந்தர் - அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் - கண் 4. முத்தொழிற் - கர்த்தாவாம் முன்னவனை, இத்தரை - மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் - கண் 5. மண்ணோர் - இருள்போக்கும் மாமணியை, விண்ணோரும் - வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக் - கண் 6. அண்டி னோர்க் - கன்புருவாம் ஆரணனை, கண்டோர்கள் - கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண் 7. அன்னையாம் - கன்னியும் ஐயனுடன் முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kantaen En Kankulira – Kartthanaiyinru Kontaatum Vinnorkal Komaanaik Kaiyilaenthik - Kan 1. Petthalaem - Satthira Munnanaiyil Urroruk - Kuyirtharum Unmaiyaam En Ratsakanaik - Kan 2. Thaevaathi - Devanai, Thaevasaenai Oyaathu - Thottharikkum Oppunigar Artravanaik - Kan 3. Paavaendhar - Thaetivarum Pakthar Paranai, Aaraendhar - Atithozhum Anbanai, En Inbanainaan - Kan 4. Mutthozhir - Kartthaavaam Munnavanai, Ittharai - Meetka Enai Natthi Vandha Mannavanaik - Kan 5. Mannor - Irulpokkum Maamaniyai, Vinnorum - Vaenti Nirkum Vinmaniyaik, Kanmaniyaik - Kan 6. Anti Nork - Kanpuruvaam Aarananai, Kantorkal - Kalitheerkkum Kaarananai, Poorananaik - Kan 7. Annaiyaam - Kanniyum Aiyanudan Munnari - Yaappasuvin Pullanaiyil Unnazhakaik - Kan