பாடல் #1900
கண் கலங்காமல்
🔤 Kan Kalangkaamal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண் கலங்காமல் காத்தீரையா கால் இடராமல் பிடித்தீரையா உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் - 2 உயிரோடு வாழும் நாட்களெல்லாம் ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரையா பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது மகிமையின் கிரீடம் என்தலைமேல் உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் (2) நோவா நடந்ததால் உம்கண்களில் கிருபை கிடைத்ததையா குடும்பமாய் பேழைக்குள் செல்என்று சொல்லி வெள்ளத்தில் இருந்து காத்தீரையா ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட சினேகிதன் என்றழைத்தீர் செய்யப் போவதை மறைப்பேனோ என்று தெரிவித்தீர் உமது திட்டங்களை உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா விண்ணப்பம் கேட்டீரையா கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று விடுவித்து மீண்டும் வாழச் செய்தீர் நறுமணம் வீசும் காணிக்கையாய் பலியாகி அன்பு கூர்ந்தீர் அதுபோல நானும் அர்ப்பணித்தேன் அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன் ஒளியாம் உம்மோடு நான் நடந்தால் பிறர் அன்பில் நான் வளர்வேன் உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி தூய்மை படுத்தும் நிச்சயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kan Kalangkaamal Kaattheeraiyaa Kaal Idaraamal Pitittheeraiyaa Uyirotu Vaazhum Naatkalellaam Ummotu Kooda Natanthituvaen - 2 Uyirotu Vaazhum Naatkalellaam Aenokku Natanthaan Ummotukooda Etutthuk Konteeraiyaa Pirathaana Maeyppan Neer Velippatum Pothu Makimaiyin Kireedam Enthalaimael Ummotu Kooda Natanthituvaen Uyirotu Vaazhum Naatkalellaam (2) Novaa Natandhathaal Umkankalil Kirupai Kitaitthathaiyaa Kutumbamaay Paezhaikkul Selenru Solli Vellatthil Irunthu Kaattheeraiyaa Aapirakaam Natanthaan Ummotukooda Sinaekidhan Endrazhaittheer Seyyap Povathai Maraippaeno Enru Therivittheer Umathu Thittanggalai Unmaiyaay Natandha Esaekkiyaa Raajaa Vinnappam Kaetteeraiyaa Kanneeraik Kantu Maranatthininru Vituvitthu Meentum Vaazhach Seytheer Narumanam Veesum Kaanikkaiyaay Paliyaaki Anpu Koorntheer Athupola Naanum Arppanitthaen Anpilae Natanthu Valarnthituvaen Oliyaam Ummotu Naan Natanthaal Pirar Anpil Naan Valarvaen Um Rattham Sakala Paavanggal Neekki Thooymai Patutthum Nicchayamae