பாடல் #1890
ஓர் நல்ல மேய்ப்பர் மந்தையில்
🔤 Or Nalla Maeyppar Manthaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஓர் நல்ல மேய்ப்பர் மந்தையில் நூறாடுகள் உண்டாம் ஓர் சாயங்காலம் ஆடொன்று காணாமற் போயிற்றாம். ஏகாந்தமான காட்டிலே நல் மேய்ப்பர் தன் ஆட்டைத் தேடினார். (2) 2. கேட்டார் அவர் தம் தோழர்கள் ஐயா! உமக்குண்டே காணாமற் போகா ஆடுகள் தொண்ணூறும் ஒன்பதும் இக்காரிருளில் போவதேன்? ஓர் ஆட்டைத் தேடி அலைவதேன்? (2) 3. நல் மேய்ப்பரோ அக்காட்டினில் அலைந்து சென்றுமே ஓர் பாழ்க்கிடங்கில் ஏங்கின அவ்வேழை ஆட்டையே மார்போடு அணைத்துக் காத்தார். தம் வீட்டினிலே கொண்டு சேர்த்தார்.(2) 4. நல் நேசரே உம் பாதங்கள் பீறுண்டு போனதேன்? உம் தூய அங்கி சேற்றினில் அமிழ்ந்து போனதேன்? இவ்வேழை ஆட்டை மீட்க நீர் இக்கோலம் ஆனீரோ யேசுவே? (2) 5. "காணாமற் போன ஆட்டை நான் கண்டேன் சந்தோஷியும்" என்றே தூதர்கள் வானிலே ஆர்ப்பரி;த்தார்களே. "காணாமற்போன ஆட்டை நான் கண்டேன் கன்மலை மீதினிலே". (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Or Nalla Maeyppar Manthaiyil Nooraatugal Untaam Or Saayangkaalam Aatonru Kaanaamar Poyirraam. Aekaandhamaana Kaattilae Nal Maeyppar Than Aattaith Thaetinaar. (2) 2. Kaettaar Avar Tham Thozharkal Aiyaa! Umakkuntae Kaanaamar Pokaa Aatugal Thonnoorum Onbathum Ikkaarirulil Povathaen? Or Aattaith Thaeti Alaivathaen? (2) 3. Nal Maeypparo Akkaattinil Alainthu Senrumae Or Paazhkkidangkil Aengkina Avvaezhai Aattaiyae Maarpotu Anaitthuk Kaatthaar. Tham Veettinilae Kontu Saertthaar.(2) 4. Nal Naesarae Um Paadhanggal Peeruntu Ponathaen? Um Thooya Angki Saerrinil Amizhnthu Ponathaen? Ivvaezhai Aattai Meetka Neer Ikkolam Aaneero Yaesuvae? (2) 5. "kaanaamar Pona Aattai Naan Kantaen Santhoshiyum" Enrae Thoodharkal Vaanilae Aarppari;tthaarkalae. "kaanaamarpona Aattai Naan Kantaen Kanmalai Meethinilae". (2)