பாடல் #1887
ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
🔤 Oyvunaal Vinnil Kontaatukinror
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர் பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்? வீரர்க்குக் க்ரீடம் தொய்ந்தோர் சுகிப்பார் தேவன் தாம் யாவிலும் யாவும் ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும் அங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும் இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார் அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய்ச்சமாதான தரிசனமாம் அக்கரை எருசலேம் என்போம் நாம் ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே வேண்டுதல் ஓர்க்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும் தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்? பேரருள் ரூடவ்ந்திடும் தேவனே நீர் பக்தரின் ஸ்தோத்ரம் என்றுமே ஏற்பீர். 5. அங்குள்ள ஓய்வுநாள் நித்தியமாம் விடிதல் முடிதல் இல்லாததாம் தூதரும் பக்தரும் ஓயாமலே ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே. 6. பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை மீண்டு நம் தேசம் போய்ச் சேரும் வரை எருசலேமை நாம் இப்பொழுதும் வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம். 7. தந்தையினாலும் குமாரனிலும் ஆவியின் மூலமும் யாவும் ஆகும் திரியேக தேவனை விண் மண்ணுள்ளார் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Oyvunaal Vinnil Kontaatukinror Paerinba Maenmai Yaar Koora Vallor? Veerarkkuk Kreedam Thoynthor Sukippaar Devan Thaam Yaavilum Yaavum Aavaar. 2. Raaja Singkaasana Maatsimaiyum Angkullor Vaazhvum Samaathaanamum Ivai Ellaam Kandarinthoril Yaar Avvannam Maandharkku Nankuraippaar? 3. Meycchamaathaana Tharisanamaam Akkarai Erusalaem Enpom Naam Aasikkum Nanmai Kaikootum Angkae Vaentudhal Orkkaalum Veen Aakaathae. 4. Seeyonin Keedhatthaip Paataadhangkum Thatukka Aelumo Etthollaiyum? Paerarul Roodavnthitum Devanae Neer Paktharin Sthothram Enrumae Aerpeer. 5. Angkulla Oyvunaal Nitthiyamaam Vitidhal Mutidhal Illaadhathaam Thoodharum Paktharum Oyaamalae Or Jeya Keertthanam Paatuvaarae. 6. Paapilon Pondra Ippaarin Sirai Meentu Nam Thaesam Poych Saerum Varai Erusalaemai Naam Ippozhuthum Vaanjsitthu Aengkith Thavitthituvom. 7. Thanthaiyinaalum Kumaaranilum Aaviyin Moolamum Yaavum Aakum Thiriyaega Devanai Vin Mannullaar Saashtaanggamaay Veezhnthu Vaazhtthituvaar.