பாடல் #1879
ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய
🔤 Oyvu Naalathai Sthaapith Tharuliya
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய உன்னதா உமக்கே ஸ்தோத்திரம். மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய்விண்டு. 1. தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்க திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க ஏகன் நின்அருள் பெற்றிங்கிகல் அற அழிக்க எவரும் ஓய்வு நாளைக்கொண்டாடியே களிக்க. 2. விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட மண் உலகில் போராட்ட சாலையில் ஓட வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட. 3. முத்தி வழி விலக்கும் துர்க்குணம் மாற்றி முன் நின்றெம்மை நடத்தியே கரை ஏற்றி எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய் போற்றி இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oyvu Naalathai Sthaapith Tharuliya Unnathaa Umakkae Sthotthiram. Maayvilaa Maraiyai Yaam Manathil Utkontu Vaazhtthi Ummaip Pugazhnthu Portra Vaayvintu. 1. Thaegak Kavalai Thozhil Yaavaiyum Ozhikka Thivya Sinthaiyaal Enggal Idhayamae Sezhikka Aegan Ninarul Perringkigal Ara Azhikka Evarum Oyvu Naalaikkontaatiyae Kalikka. 2. Vinnorudan Yaavarum Aaviyil Kooda Vaethaa Ummaip Pugazhnthu Manggalam Paada Man Ulakil Poraatta Saalaiyil Oda Varam Alitthida Ummaik Kenjsi Manraada. 3. Mutthi Vazhi Vilakkum Thurkkunam Maarri Mun Ninremmai Natatthiyae Karai Aerri Etthaesatthaarum Ummai Aegamaay Porri Irainjja Arulum Umathaaviyai Oorri.