பாடல் #1873
ஓடு நீ ஓடு
🔤 Otu Nee Otu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து நின்றான் உலகை வென்றானே - 2 அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு - 2 ஆபத்து வரும் வேளை நீ அஞ்சவே கூடாது எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் - 2 சோதனை வரும்போது நீ சோர்ந்திடலாகாது வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு துணிந்து போராடு ஜீவ கிரீடமுண்டு - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Otu Nee Otu Nee Otu Unnathar Paniyithu Otu Unmaiyaay Seythida Otu Mutivubariyandham Otu Mannarin Paniyithu Otu Munnoti Mosaeyaip Paartthu Ekipthin Inbatthai Verutthu Munmaathiriyaanaan Unakku Uzhaitthu Ninraan Ulakai Venraanae - 2 Anbarin Paniyithu Otu Athil Asathithaan Kootaathu Thunbanggal Varumpothu Thuninthu Munaivathae Azhaku Muyandrathai Mutitthuvitu Munainthu Munnaeru - 2 Aabatthu Varum Vaelai Nee Anjjavae Kootaathu Ethiri Thortravanthaan Ethirtthitu Thinam Avanai Azhaippil Kuzhappam Vaentaam Azhaitthavar Mun Selvathaal - 2 Sodhanai Varumpothu Nee Sornthidalaakaathu Vaedhanai Varumpothu Viyartthu Nirpathu Thavaru Thuninthu Poraatu Jeeva Kireedamuntu - 2