பாடல் #1866
ஓசன்னா பாலர் பாடும்
🔤 Osannaa Paalar Paatum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர் தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர். உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்; மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும், மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம் நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்; உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே; நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Paalar Paatum Raajaavaam Meetparkkae Makimai , Pugazh , Keertthi Ellaam Untaagavae Kartthaavin Naamatthaalae Varung Komaanae , Neer Thaaveethin Raajaa Maindhan , Thuthikkappatuveer. Unnatha Thoodhar Saenai Vinnil Pugazhuvaar; Maandhar Pataippu Yaavum Isainthu Porruvaar. Ummunnae Kuruttholai Kontaekinaarpolum, Manraattu , Keedham , Sthotthiram Kontummaich Saevippom Neer Paatubatumunnae Paatinaar Yoodharum; Uyartthappatta Ummai Thuthippom Naanggalum. Appaattaik Kaettavannam Em Vaendal Kaelumae; Neer Nanmaiyaal Niraindha Kaaruniya Vaendharae.