பாடல் #1831
ஒருபோதும் வற்றாத பேரன்பு
🔤 Orupothum Varraadha Paeranpu
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருபோதும் வற்றாத பேரன்புக் கடலில் என் வாழ்வின் படகுசெல்கின்றது... - 2 அருள்நாதர் இயேசு என் படகில் இருக்க எனக்கென்ன மனக்கவலை... - 2 துயர் என்றும் புயல் காற்று அலையாக வந்தால் என் நேசர் எழுந்து அதட்டிடுவார்... - 2 ஆறுதல் அடைவேன்... அமைதியும் பெறுவேன்... - 2 பயமின்றி தினமும் நான் பயணம் செய்வேன்... - 2 இருள் என்னும் இன்னல்கள் எமைச் சூழும் நேரம் ஜெபம் என்னும் ஒளியேற்றி வழிகாணுவேன்... - 2 பரிசுத்த ஆவியே... கலங்கரை விளக்கம்... - 2 சரியான தேசத்திற்கு கொண்டு போவார்... - 2 நிலையான பொன் நகரம் நான் காண வேண்டி அயராத ஜெபம் என்ற தண்டு வலிப்பேன்... - 2 ஆறுதலின் தேவன்... ஆண்டவர் இயேசு... - 2 அவரோடு எந்நாளும் நான் வாழுவேன்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orupothum Varraadha Paeranpuk Katalil En Vaazhvin Patakuselkindrathu... - 2 Arulnaadhar Yesu En Patakil Irukka Enakkenna Manakkavalai... - 2 Thuyar Enrum Puyal Kaarru Alaiyaaga Vanthaal En Naesar Ezhunthu Adhattituvaar... - 2 Aarudhal Ataivaen... Amaithiyum Peruvaen... - 2 Payaminri Thinamum Naan Payanam Seyvaen... - 2 Irul Ennum Innalkal Emaich Soozhum Naeram Jebam Ennum Oliyaerri Vazhikaanuvaen... - 2 Parisuttha Aaviyae... Kalanggarai Vilakkam... - 2 Sariyaana Thaesatthirku Kontu Povaar... - 2 Nilaiyaana Pon Nakaram Naan Kaana Vaenti Ayaraadha Jebam Endra Thantu Valippaen... - 2 Aarudhalin Devan... Aandavar Yesu... - 2 Avarotu Ennaalum Naan Vaazhuvaen... - 2