பாடல் #1826
ஒரு வார்த்தை சொல்லும்
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே என் ஆன்மா குணமடையும் ஒரு வார்த்தை வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் தானே உள்ளன ஒரு வார்த்தை இறைவா பேசும் இயேசுவே பேசும் - 2 வாழ்வு தரும் வார்த்தையினால் குருடனும் பார்வை பெற்றான் - அந்த வல்லமையின் வார்த்தையினால் ஊமையும் பேசினான் ஒரு மொழி சொன்னதினால் அந்த அலைகடல் ஓய்ந்ததே - அந்த திருமொழி சொல்வதனால் இன்று என்மனம்மகிழ்கின்றது கலைமான்கள் தண்ணீருக்காய் ஏங்கி தவிப்பது போல் என் இயேசுவே உம் மொழிகளுக்காய் என்னுள்ளம் தவிக்கின்றது அருள் மொழி நாயகனே ஆறுதல் தந்திடுவீர் - உம் அன்பினிலே வாழ்ந்திடவே வழிதனை காட்டிடுவீர்