பாடல் #1821
ஒரு நாளும் அழியாத
🔤 Oru Naalum Azhiyaadha
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நாளும் அழியாத உறவென்னிலே உருவாக்கும் அருளேசு வரவென்னிலே பிளவில்லை அன்பில் துயரில்லை நெஞ்சில் எனை ஆளும் அவரன்பு இனி நாளுமே நட்பென்னும் வானங்கள் இருள் மூடும் போதிலே உறவென்னும் கீதங்கள் உருமாறும் போதிலே உன் அருளன்பு எனைத் தாங்குமே அன்பென்னும் கீதங்கள் அணைகின்ற நேரங்கள் ஒளியாக எழுந்து உயிரோடு கலந்து ஒரு நாளும் அழியாத உறவொன்று தா இனி என்னில் வாழ்வதோ நானல்ல நீ இயேசுவே இரவென்ன பகலென்னவோ இதயத்துள் நீ பேசவே இனி எந்நாளும் பயம் இல்லையே முடிவில்லா வாழ்வுக்கு முதலாகும் இயேசுவே ஊரெங்கும் செல்வேன் உன் நாமம் சொல்வேன் உன்னன்பில் நிலையாகும் வரமொன்று தா நம்பிக்கை நீயல்லவோ நலமாக்க வா இறைவா நெஞ்சுக்குள் நோயல்லவோ குணமாக்க வா இறைவா இனி நானுந்தன் சேயல்லவோ கனிவுடன் கேட்கின்றேன் கருணைக்கண் நோக்குமே காலங்கள் தோறும் உன் பாதங்கள் வேண்டும் சோகங்கள் அங்கே கண் மூடித்துயிலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Naalum Azhiyaadha Uravennilae Uruvaakkum Arulaesu Varavennilae Pilavillai Anpil Thuyarillai Nenjsil Enai Aalum Avaranpu Ini Naalumae Natpennum Vaananggal Irul Mootum Pothilae Uravennum Keedhanggal Urumaarum Pothilae Un Arulanpu Enaith Thaangkumae Anpennum Keedhanggal Anaikindra Naeranggal Oliyaaga Ezhunthu Uyirotu Kalanthu Oru Naalum Azhiyaadha Uravonru Thaa Ini Ennil Vaazhvatho Naanalla Nee Yesuvae Iravenna Pakalennavo Idhayatthul Nee Paesavae Ini Ennaalum Payam Illaiyae Mutivillaa Vaazhvukku Mudhalaakum Yesuvae Oorengkum Selvaen Un Naamam Solvaen Unnanpil Nilaiyaakum Varamonru Thaa Nampikkai Neeyallavo Nalamaakka Vaa Iraivaa Nenjsukkul Noyallavo Kunamaakka Vaa Iraivaa Ini Naanundhan Saeyallavo Kanivudan Kaetkinraen Karunaikkan Nokkumae Kaalanggal Thorum Un Paadhanggal Vaentum Soganggal Angkae Kan Mootitthuyilum