பாடல் #1792
ஐயோ நான் ஒரு பாவ
🔤 Aiyo Naan Oru Paava
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஒரு பாவ ஜென்மி 1. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே! ஆண்டு ரட்சித் தருளாய் - மனுவேலனே! உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர் ஒதுக்கிட முண்டோ வேறே? – மனுவேலனே! 2. நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம் ஞானம் எலாம் இழந்து – மனுவேலனே! சொல்ல வெட்கம் அநீதி சுசிகேடு நிர்ப்பாக்கியம் துர்ப்புத்தியும் அடைந்தேன் – மனுவேலனே! 3. மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை மங்கு காடாக்கி னேனே – மனுவேலனே! ஆட்சி கொளும் உன்சுத்;த ஆலயமாம் என் நெஞ்சை அலகைக் கிடம் ஆக்கினேன் – மனுவேலனே! 4. உன்னை முழுப் பலத்தால் நேசியாமலே நெஞ்சும் உரங் கொண்ட பாவி ஆனேன் – மனுவேலனே! என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான் இகலுற் றிருந்தேனையா – மனுவேலனே! 5. துப்புர வாம் சுத்தக் கண்ணனே உன் முன் இன்னும் துணிகர மாய் நடந்து – மனுவேலனே! இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த ஏழைப் பாவிக் கிரங்காய் – மனுவேலனே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Oru Paava Jenmi 1. Aiyo Naan Oru Paava Jenmi Aanaenae! Aantu Ratsith Tharulaay - Manuvaelanae! Uyyumbati Theyvamae Unnai Allaal Enakkor Othukkida Munto Vaerae? – Manuvaelanae! 2. Nal Varamaayp Pertra Neethi Susi Paakkiyam Njaanam Elaam Izhanthu – Manuvaelanae! Solla Vetkam Aneethi Susikaetu Nirppaakkiyam Thurpputthiyum Atainthaen – Manuvaelanae! 3. Maatsi Urum Singkaara Vanamaam Ena Thulatthai Mangku Kaataakki Naenae – Manuvaelanae! Aatsi Kolum Unsuth;tha Aalayamaam En Nenjsai Alakaik Kidam Aakkinaen – Manuvaelanae! 4. Unnai Muzhup Palatthaal Naesiyaamalae Nenjsum Urang Konda Paavi Aanaen – Manuvaelanae! Ennai Nigaraaga En Piranai Naesiyaamal Naan Igalur Rirunthaenaiyaa – Manuvaelanae! 5. Thuppura Vaam Sutthak Kannanae Un Mun Innum Thunigara Maay Natanthu – Manuvaelanae! Ippati Jenma Kanma Paavatthaal Kaedataindha Aezhaip Paavik Kirangkaay – Manuvaelanae!