பாடல் #1785
ஐயா உனதருள்
🔤 Aiyaa Unatharul
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயா, உனதருள் புரி, அருமை மேசையா! பொய்யா மருள்வினை, செய்யா துலகதில் நையா தடிமைகொள், துய்யா, மெய்யா. – ஐயா 1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா, சாதா ரண வேத வினோத சங்கீதா, காதா ர வினவு,நீ தா எனின் குறை, தாதா, பர குரு நாதா, போதா! – ஐயா 2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா; சிந்தா குலமே தவிர், நீடு சுகந்தா; உந்தா பரம் அருள் எந்தா,ஞானப்ர பந்தா, வருசதா னந்தா நந்தா! – ஐயா 3. ஈசா, நசராபுரி மேவிய வாசா, பூசா விதி மாமறை புகழுபதேசா, மாசா மிகு பவ நாசா, எருசலை ராசா, ஒரு சரு வேசா, நேசா. – ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyaa, Unatharul Puri, Arumai Maesaiyaa! Poyyaa Marulvinai, Seyyaa Thulakathil Naiyaa Thatimaikol, Thuyyaa, Meyyaa. – Aiyaa 1. Aathaa Ramum Nee Yalathaar Thirup Paathaa, Saathaa Rana Vaedha Vinodha Sangkeethaa, Kaathaa Ra Vinavu,nee Thaa Enin Kurai, Thaathaa, Para Kuru Naathaa, Pothaa! – Aiyaa 2. Anthaa Thi, Anaathi, Pithaa Oru Mainthaa; Sinthaa Kulamae Thavir, Neetu Suganthaa; Unthaa Param Arul Enthaa,njaanapra Panthaa, Varusathaa Nanthaa Nanthaa! – Aiyaa 3. Eesaa, Nasaraapuri Maeviya Vaasaa, Poosaa Vithi Maamarai Pugazhubathaesaa, Maasaa Miku Pava Naasaa, Erusalai Raasaa, Oru Saru Vaesaa, Naesaa. – Aiyaa