பாடல் #1782
ஐயனே நரர்மீதிரங்கி
🔤 Aiyanae Nararmeethirangki
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயனே, நரர்மீதிரங்கி அருள், ஐயனே, 1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன் துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும். - ஐய 2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத்தவிக்கிறார்கள்; வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள். - ஐய 3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன் மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய். - ஐய 4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன் சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப் பந்தம் தவிர்க்கவேண்டும். - ஐய 5.ஆகாதவன் மடிந்து சாகா துயர் பிழைக்க, வாகாய் அருள் செயும் திரியேகா; உமக்குத் தோத்ரம். - ஐய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyanae, Nararmeethirangki Arul, Aiyanae, 1.vaiyang Ketukkappattu Noyyu Thanaathi! Unthan Thuyya Aaviyai Vitutthuyyak Kirupai Puriyum. - Aiya 2.aadhatthin Makkal Ellaam Podhatthavikkiraarkal; Vaedhath Thuraip Pirakaaram Needhatthun Aavi Thanthaal. - Aiya 3.maindhar Matinthu Nara Kandhanil Veezhaathundran Maindhanin Aaviyaith Than Thendhavidhamum Kaappaay. - Aiya 4.munthu Manudarukkuth Thandha Vaakkutthatthatthun Sinthai Makizhndhavar Nirp Pandham Thavirkkavaentum. - Aiya 5.aakaadhavan Matinthu Saakaa Thuyar Pizhaikka, Vaakaay Arul Seyum Thiriyaekaa; Umakkuth Thothram. - Aiya