பாடல் #1780
ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
🔤 Aiyanae Ivark Kaasi Eekuvaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயனே! இவர்க் காசி ஈகுவாய், மெய்யாய் உன்னைச் சார - என்றும் பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு, மெய்யாய் உன்னைச் சார - என்றும் 1.பாவ முஞ்செக சால மும்விட்டுப் பனுவ லுரைப்படியே, - வெகு ஆவ லாயுன தருளி னாலுயிர் அடையக் கதி யடைய - என்றும் 2.நற்று திசெயும் பத்த ராயுன்றன் பொற்றா ளிணை போற்றி! - ஓங்கு சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச் சான்றோர் நெறிசார - என்றும் 3.இன்று தொட்டிவர் என்று மேயுனைச் சென்றே எங்குங் கூறிப், - பயன் நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினி ஒன்றி யுயர்ந் தோங்க - என்றும் 4.அன்று சீடராய்ப் பன்னி ருவரை அழைத்தாய், தயை விளைத்தாய்; - இவர் என்றுஞ் சபையில் ஒன்றி வைகிட நின்றுன் கிருபை ஈவாய் - என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyanae! Ivark Kaasi Eekuvaay, Meyyaay Unnaich Saara - Enrum Poyyaa Mivvula Kaasai Yaivittu, Meyyaay Unnaich Saara - Enrum 1.paava Munjsega Saala Mumvittup Panuva Luraippatiyae, - Veku Aava Laayuna Tharuli Naaluyir Ataiyak Kathi Yataiya - Enrum 2.narru Thiseyum Pattha Raayundran Porraa Linai Porri! - Ongku Sarku Namumey Vaazhvu Maeperruch Saanror Nerisaara - Enrum 3.inru Thottivar Enru Maeyunaich Senrae Engkung Koorip, - Payan Nanri Perruyar Venri Yurrini Onri Yuyarn Thongga - Enrum 4.anru Seedaraayp Panni Ruvarai Azhaitthaay, Thayai Vilaitthaay; - Ivar Enrunj Sapaiyil Onri Vaikida Ninrun Kirupai Eevaay - Enrum