பாடல் #1766
ஏன் இந்தப் பாடுதான்
🔤 Aen Indhap Paatuthaan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி என்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமிய 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின் கெழு மலர்க் காவிடை போகவும் அச்சயனே, மனம் நோகவும் – சொல் அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும் முறை முகம் தரைபட வீழவும் மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு மரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர் அகலச் செய்யும் என்றுரைக்கவும் செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு தேவதூதன் வந்து தேற்றவும் 4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம் பாக உதிர வேர்வை ஓடவும் சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன் தாசரும் பதந்தனை நாடவும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aen Indhap Paatuthaan! – Suvaami Enna Tharuvaen Idharkeetunaan? Aanandha Naemiyae – Enai Aalavandha Kuru Suvaamiya 1. Kethsemanae Yidam Aegavum – Athin Kezhu Malark Kaavitai Pogavum Acchayanae, Manam Nogavum – Sol Alavillaath Thuyaramaagavum 2. Muzhanthaal Patiyittuth Thaazhavum – Mum Murai Mugam Tharaibata Veezhavum Mazhunggath Thuyar Umaich Soozhavum, – Kotu Marana Vaathaiyinil Moozhkavum 3. Appaa, Pithaavae Endrazhaikkavum, – Thuyar Agalach Seyyum Enruraikkavum Seppum Un Sittham Enru Saartravum, – Oru Thaevathoodhan Vanthu Thaertravum 4. Aatthumath Thuyar Miga Needavum, Kuzham Paaga Uthira Vaervai Odavum Saatthira Mozhigal Otthaadavum, – Undhan Thaasarum Pathandhanai Naadavum