பாடல் #1764
ஏனோ பல
🔤 Aeno Pala
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏனோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய். மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே. - ஏனோ 1.அன்னை யிடத்துருவாய், உன்னை அமைத்த தந்தை அல்லவோ? - பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? - ஏனோ 2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும், - உன்னை மறவோம் ஒருகாலும், என வார்த்தை கொடுத்தாரே. - ஏனோ 3.இஸ்ரேலரைக் காப்போர் உறங்கிடுவார் என நினையேல்; - அவர் நிசமாக உன் வல பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய். - ஏனோ 4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன், தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும், - தேவ சேயர்கள் பட்டினியாகக் காணேன், என்ற திவ்ய உரையும் பொய் யாமோ? - ஏனோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aeno Pala Ninaivaalum Nee Unnai Alaikkazhippaay. Mannarkal Mannavan Aakiya Yaesu Nin Mannavaraay Irukkaiyilae. - Aeno 1.annai Yidatthuruvaay, Unnai Amaittha Thanthai Allavo? - Pinnum Aakaaramum Utaiyum Jeevanum Alippathavar Allavo? - Aeno 2.maathaanaval Saeyai Oru Vaelai Maranthaalum, - Unnai Maravom Orukaalum, Ena Vaartthai Kotutthaarae. - Aeno 3.israelaraik Kaappor Urangkituvaar Ena Ninaiyael; - Avar Nisamaaga Un Vala Paagatthil Nizhal Aavar Endrarivaay. - Aeno 4.singganggal Pattiniyaay Irukkak Kantaen, Thaesam Engkum Surrip Paartthum, - Thaeva Saeyarkal Pattiniyaagak Kaanaen, Endra Thivya Uraiyum Poy Yaamo? - Aeno