பாடல் #1758
ஏசு மகாராசனுக்கே
🔤 Aesu Makaaraasanukkae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே! மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே, ஜே! 1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர், கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார். 2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே, பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார். 3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார். 4.சோலைக்கிளி குயிலினங்கள் சூழ்ந்து பாடியே, மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே. 5.ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில் ஏந்தி நின்று ஆடிப்பாடிச் சென்ற சிறுவரே. 6.ஆண்டவருக் கேற்ற மறி நானும் ஆவேனே, தாண்டவம் ஆடி அவரை ஈண்டு போற்றுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesu Makaaraasanukkae Inrum Enrum Jae! Meesurarkal Porrum Enggal Eesanukku Jae, Jae! 1.sinna Mari Yonraich Seedar Kontu Saertthanar, Kanni Mari Makanaip Paalar Kaana Aekinaar. 2.maavilaiyum Marakkilaiyum Tharitthuvanthumae, Paaviyin Naesarukkavar Thaavi Viritthaar. 3.kaanariya Kootta Janam Kantu Kalitthuch Saenamaaga Vasthiram Viritthuch Saevitthaar. 4.solaikkili Kuyilinanggal Soozhnthu Paatiyae, Maalaiyittaalpol Avarai Makizhnthu Portravae. 5.eenthu Seti Kurutthugalai Etutthuk Kaigalil Aenthi Ninru Aatippaatich Sendra Siruvarae. 6.aandavaruk Kaertra Mari Naanum Aavaenae, Thaandavam Aati Avarai Eentu Porruvaen.