பாடல் #1742
எழுந்திடுவீர் நீர் வாலிபரே
🔤 Ezhunthituveer Neer Vaalibarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்திடுவீர் நீர் வாலிபரே - நாமும் இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம் நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம் எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம் இயேசுவின் வீரரே எழுந்திடுவோம் அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட தூசியை உதறி எழுந்திடுவோம் விழித்திருங்கள் நீர் கன்னியரே - நல்ல விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர் மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம் நித்திரைகள் வேண்டாம் முதியோரே - நல்ல நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள் தினம் நிறைவேற கண்டதில்லையோ சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே - நல்ல தைலாபிஷேகம் செய்ய வருவீரே புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி நேசர் பாதத்தில் உடைத்திடுவீர் இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் - நல்ல இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன் என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும் இன்றே யாவரும் எழுந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthituveer Neer Vaalibarae - Naamum Yesuvin Naamatthai Uyartthituvom Innum Konjjam Naeram Yesu Varum Naeram Nitthirai Seyyaamal Uzhaitthituvom Ezhunthituvom Naam Ezhunthituvom Yesuvin Veerarae Ezhunthituvom Anuthinam Azhinthitum Paaratham Kaatthida Thoosiyai Udhari Ezhunthituvom Vizhitthirunggal Neer Kanniyarae - Nalla Vilakkugal Eriya Enney Oorruveer Manavaalan Varukaiyin Sattham Kaetpathaalae Kanniyarkal Naamum Ezhunthituvom Nitthiraigal Vaentaam Muthiyorae - Nalla Naeram Vaelai Thannai Nithaanippeerae Theerkkar Murpithaakkal Seppiya Uraigal Thinam Niraivaera Kandathillaiyo Sanjjalanggal Vaentaam Thaaymaarae - Nalla Thailaapishaegam Seyya Varuveerae Puthaiyalkal Pondra Putthiraraam Parani Naesar Paadhatthil Utaitthituveer Inthu Thaesam Vella Muyanrituvom - Nalla Yesu Munnae Selvaar Payam Iniyaen Enna Thatai Varinum Yesu Naamam Jeyikkum Inrae Yaavarum Ezhunthituvom