பாடல் #1700
எப்போதும் உம்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: D Maj
Beat: 4/4
எப்போதும் உம்மோடுதான் உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானே என் வாழ்க்கையெல்லாம் உம் புகழ்தானே ஆராதனை ஆராதனை (2) ஆயுள் இருக்கும்வரை (என்) - எப்போதும் பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே விருப்பமில்லை - எனக்கு என்றென்றைக்கும் என் உள்ளத்தின் பெலனே நீர்தானையா உம் சித்தம் போல நடத்துகிறீர் மகிமையில் ஏற்றுக் கொள்வீர் - உம் காருண்யத்தின் கயிறுகளால் கட்டி என்னை இழுத்துக் கொண்டீர் பேரன்பினால் அணைத்துக் கொண்டீர் - உம் பெரியவனாக்கி விட்டீர் - என்னைப் கழுத்தில் உள்ள நுகம் நீக்கி நிமிர்ந்து நடக்கச் செய்தீர் - என் கற்றுக் கொடத்தீர் கரம் பிடித்து கைவிடாமல் காப்பாற்றினீர் - இதுவரை உம்மைத்தானே அமைக்கலமாய் அண்டிக் கொண்டேன் அனுதினமும் புகலிடமே என் மறைவிடமே உம் புகழ்தனை சொல்லி வருவேன்