பாடல் #1698
எப்போதுமே இன்ப வாழ்வே
🔤 Eppothumae Inba Vaazhvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போதுமே இன்ப வாழ்வே! யேசையர் என்னோடிருப்பதாலே. 1. எப்பொருளும் குப்பை போன்றனவே மாந்தர் எவரும் ஓர் நாளில் தூசிதானே என்னருமை நேசர் யேசு நாதர் - எனக் கெல்லாம் அவர் பின்னே ஏது குறை? 2. மாதா பிதா உற்றார் மாண்டிட்டாலும் பின்னும் மற்றுள்ள இஷ்டர் மறைந்திட்டாலும் மன்னன் கிறிஸ்தேசு மங்கா நேசர் எனக் கென்ன குறை எனக்கேது பீடை? 3. காவற்காரர் யேசு கண்ணுறங்கார் என் மேல் ஆவல் மிகுந்தோர் அன்பு மிகுந்தோர் பட்டயத்தால் பக்கத்தாயிரம் சாயினும் பயந்திடேன் சற்று மயர்ந்திடேன். 4. தங்குமிடம் பூமி சத்திரமே - விண்ணின் தங்க வீட்டின் வாழ்வு நித்தியமே மங்கா வாழ்வு எனக்கங்கே உண்டு பின்னே இங்கே எதை எந்தன் பங்கென்னுவேன்? 5. எத்தனையாய் மாந்தர் தூஷித்தாலும் பின்னும் இகழ்ந்தென் பேரைக் கெடுத்திட்டாலும் ஏதும் சொல்லேன் நாவெழும்ப விடேன் கிறிஸ் தேசு போலவர்க் கிரங்கிடுவேன். 6. என்ன நஷ்டம் தொல்லை துன்பம் வந்தும் சாத்தான் ஏக படையாய் எனைச் சூழ்ந்தாலும் என்ன பயம் அதால் ஏதபாயம் எனக் கேசு துணை சேனை வீரரவர். 7. நிற்பேன் என் நேசர் கரம் பிடிப்பேன் சாத்தான் நிற்காதோட மறை வாள் பிடிப்பேன் வில்பிடிப்பேன் ஜெய வெற்றி கொள்வேன் சேனா வீரர் பலத்தாலே தீரனாவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppothumae Inba Vaazhvae! Yaesaiyar Ennotiruppathaalae. 1. Epporulum Kuppai Pondranavae Maandhar Evarum Or Naalil Thoosithaanae Ennarumai Naesar Yaesu Naadhar - Enak Kellaam Avar Pinnae Aethu Kurai? 2. Maathaa Pithaa Urraar Maantittaalum Pinnum Marrulla Ishtar Marainthittaalum Mannan Kiristhaesu Mangkaa Naesar Enak Kenna Kurai Enakkaethu Peetai? 3. Kaavarkaarar Yaesu Kannurangkaar En Mael Aaval Mikunthor Anpu Mikunthor Pattayatthaal Pakkatthaayiram Saayinum Payanthitaen Sarru Mayarnthitaen. 4. Thangkumidam Poomi Satthiramae - Vinnin Thangga Veettin Vaazhvu Nitthiyamae Mangkaa Vaazhvu Enakkangkae Untu Pinnae Ingkae Ethai Endhan Pangkennuvaen? 5. Etthanaiyaay Maandhar Thooshitthaalum Pinnum Igazhnthen Paeraik Ketutthittaalum Aethum Sollaen Naavezhumba Vitaen Kiris Thaesu Polavark Kirangkituvaen. 6. Enna Nashtam Thollai Thunbam Vanthum Saatthaan Aega Pataiyaay Enaich Soozhnthaalum Enna Payam Athaal Aedhapaayam Enak Kaesu Thunai Saenai Veeraravar. 7. Nirpaen En Naesar Karam Pitippaen Saatthaan Nirkaathoda Marai Vaal Pitippaen Vilpitippaen Jeya Verri Kolvaen Saenaa Veerar Palatthaalae Theeranaavaen.