பாடல் #1697
எப்போ காண்பேனோ
🔤 Eppo Kaanpaeno
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ? எது என் சீயோனோ? அதின்னும் எத்தனை தொலையோ? 1.என் யேசுநாதர், - என் ஆத்தும மீட்பர், என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை. - எப் 2.தூதர்கள் கூடிச் - சோபனம் பாடி, நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. - எப் 3.ஜீவ கிரீடம், - திவ்விய வாழ்வு, பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே. - எப் 4.துன்பங்கள் மாறும், - சுகம் வந்து சேரும்; இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். - எப் 5.உலகத்தின் கவலை - ஒன்றும் செய்யாதே; பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். - எப் 6.கைகளில் எடுத்தென் - கண்ணீரைத் துடைப்பார்; ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். - எப்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppo Kaanpaeno? Eppo Saervaeno? Ethu En Seeyono? Athinnum Etthanai Tholaiyo? 1.en Yaesunaadhar, - En Aatthuma Meetpar, En Ratsakaraakiya Yaesukiristhu Irukkira Idatthai. - Ep 2.thoodharkal Kootich - Sobanam Paati, Naadhan Kiristhuvaip Porrum Paramanal Vaazhvai. - Ep 3.jeeva Kireedam, - Thivviya Vaazhvu, Paavi Enakkup Parisutthavaankalin Pangkumuntaamae. - Ep 4.thunbanggal Maarum, - Sugam Vanthu Saerum; Inbak Kiristhuvinidatthil Saernthaal En Manam Aarum. - Ep 5.ulakatthin Kavalai - Onrum Seyyaathae; Palavidhatthollai Iraathu, Angkae Paakkiyam Kolvaen. - Ep 6.kaigalil Etutthen - Kanneeraith Thutaippaar; Aiyan Kiristhumael Kavipaati Naan Aanandham Kolvaen. - Ep