பாடல் #1687
என்றென்றும் ஜீவிப்போர்
🔤 Enrenrum Jeevippor
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர் எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர் மா மேன்மை மகத்துவர் அநாதியோராம் சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம். 2. ஓய்வோ துரிதமோ இன்றி ஒளிபோல் ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால் வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும் அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும். 3. பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர் யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர் மலர் இலைபோல் மலர்வோம் செழிப்போம் உதிர்வோம் சாவோம் நீரோ மாறாதோராம். 4. மா மாட்சி பிதா தூய ஜோதி தந்தாய் தாழுவர் உம் தூதர் மா வணக்கமாய் துதிப்போம் மகத்தாய்க் காணத் தோற்றுவீர் கண் கூசும் ஜோதியாம் ஜோதி தேவரீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Enrenrum Jeevippor Adharisanar Ettaa Oliyilullor Sarvanjaanar Maa Maenmai Makatthuvar Anaathiyoraam Sarvavallor Venror Naamam Porruvom. 2. Oyvo Thuridhamo Inri Olipol Otungkaa Ponraa Sakthiyotaalvathaal Vaan Ettum Malaipol Um Neethi Nirkum Anpu Nanmai Peyyum Undhan Maegamum. 3. Paeruyir Sirruyir Jeevan Thaevareer Yaavarkkullum Uyveer Meyyaam Jeevan Neer Malar Ilaipol Malarvom Sezhippom Uthirvom Saavom Neero Maaraathoraam. 4. Maa Maatsi Pithaa Thooya Jothi Thanthaay Thaazhuvar Um Thoodhar Maa Vanakkamaay Thuthippom Makatthaayk Kaanath Thorruveer Kan Koosum Jothiyaam Jothi Thaevareer.