பாடல் #1677
என்னையும் உம் தாட்டின் மந்தையோ
🔤 Ennaiyum Um Thaattin Manthaiyo
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னையும் உம் தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. 1.வாசலாகவே இருக்கிறேன், எனால் வந்தவன் மனம் நொந்திடான், - வெகு நேசமாகவே வாழ்வான், என்ற நல் நிமலனே, எனைச் சேர்த்திடும் - என்னை 2.ஐயிருபது ஆட்டினில் ஒன்று அகன்றிட, மனம் உகந்து கோன் - அதை மெய்யதாகவே தேடுவான் என்ற மேய்ப்பரே, எனைச் சேர்த்திடும் - என்னை 3.நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என் நாதனே, ஞான போதனே, - ஜீவ புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப் போஷித்து முசிப்பாற்றிடும் - என்னை 4.மேய்ப்பராகவே இருக்கிறீர், எந்தம் மேய்ச்சலும் நீர் தாமலோ - ஞான வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான் வளர்ந்திட அருள் புரிந்திடும் - என்னை 5.அன்புடைய மெய் மேய்ப்பராயிருந்து ஆட்டுக்காயச் சொந்த ஜீவனை - வெகு இன்பமாகவே ஈந்து மீட்ட நல் ஏசுவே, எனைச் சேர்த்திடும் - என்னை 6. வன்னியான தோர் அலகைப் பேய் தனை வதைத்திட ஞான பெலத்துடன் சிறந்து இந்நிலத்தினில் வந்துதித்த நல் ஏசுவே எனைச் சேர்த்திடும் - என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaiyum Um Thaattin Manthaiyo Taerruk Kaatthitum, Yaesuvae. 1.vaasalaagavae Irukkiraen, Enaal Vandhavan Manam Nonthitaan, - Veku Naesamaagavae Vaazhvaan, Endra Nal Nimalanae, Enaich Saertthitum - Ennai 2.aiyirubathu Aattinil Onru Aganrida, Manam Uganthu Kon - Athai Meyyathaagavae Thaetuvaan Endra Maeypparae, Enaich Saertthitum - Ennai 3.nalla Maeyppan Naan Ena Mozhindha En Naadhanae, Njaana Podhanae, - Jeeva Pullulla Sthalan Thannil Kontenaip Poshitthu Musippaarritum - Ennai 4.maeypparaagavae Irukkireer, Endham Maeycchalum Neer Thaamalo - Njaana Vaayppulla Sathya Maraiyil Maeynthu Naan Valarnthida Arul Purinthitum - Ennai 5.anputaiya Mey Maeypparaayirunthu Aattukkaayach Sondha Jeevanai - Veku Inbamaagavae Eenthu Meetta Nal Aesuvae, Enaich Saertthitum - Ennai 6. Vanniyaana Thor Alakaip Paey Thanai Vathaitthida Njaana Pelatthudan Siranthu Innilatthinil Vanthuthittha Nal Aesuvae Enaich Saertthitum - Ennai