பாடல் #166
அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே
🔤 Apishaegam Nugatthai Muritthitumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே எங்கள் உள்ளங்களை தூய தேவ ஆவியே 1. வல்லமை விளங்கும் ஆவியே வரங்கள் நல்கும் ஆவியே வானம் திறந்து அக்கினி மழையாய் வாரும் எங்கள் மத்தியிலே 2. தாகம் தீர்க்கும் ஆவியே தடைகள் உடைக்கும் ஆவியே கட்டுகள் உடைத்து கண்ணீரை துடைத்து கவலை நீக்கும் ஆவியே 3. சுத்திகரிக்கும் ஆவியே சுயத்தை நொறுக்கும் ஆவியே தேவ சுபாவம் கிருபை நல்கும் பரிந்து பேசும் ஆவியே 4. அறிவை உணர்த்தும் ஆவியே ஆற்றல் விளங்கும் ஆவியே தேவ சபையில் வாசம் செய்யும் மகிமை விளங்கும் ஆவியே 5. உருக்கும் அக்கினி எரியுமாப் போல் வானம் கிழித்து இறங்குமே ஜாதி ஜனங்கள் தேசம் அசைய அரும் பெரும் காரியம் செய்திடுமே 6. துள்ளிக் குதிக்கும் மான்கள் போல காண்டா மிருக ஆற்றல் போல நிமிர்ந்து நிற்கும் கேதுரு போல தேவ சபையை நிறுத்துமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Nugatthai Muritthitumae Anpin Aaviyaanavarae Nirappitumae Enggal Ullanggalai Thooya Thaeva Aaviyae 1. Vallamai Vilangkum Aaviyae Varanggal Nalkum Aaviyae Vaanam Thiranthu Akkini Mazhaiyaay Vaarum Enggal Matthiyilae 2. Thaagam Theerkkum Aaviyae Thataigal Utaikkum Aaviyae Kattugal Utaitthu Kanneerai Thutaitthu Kavalai Neekkum Aaviyae 3. Sutthigarikkum Aaviyae Suyatthai Norukkum Aaviyae Thaeva Supaavam Kirupai Nalkum Parinthu Paesum Aaviyae 4. Arivai Unartthum Aaviyae Aartral Vilangkum Aaviyae Thaeva Sapaiyil Vaasam Seyyum Makimai Vilangkum Aaviyae 5. Urukkum Akkini Eriyumaap Pol Vaanam Kizhitthu Irangkumae Jaathi Jananggal Thaesam Asaiya Arum Perum Kaariyam Seythitumae 6. Thullik Kuthikkum Maankal Pola Kaantaa Miruga Aartral Pola Nimirnthu Nirkum Kaethuru Pola Thaeva Sapaiyai Nirutthumae