பாடல் #1655
என்னை ஜீவபலியாய்
🔤 Ennai Jeevapaliyaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன், ஏற்றுக் கொள்ளும், இயேசுவே. அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்த மல்லாது, இப்போது. - என்னை 1.அந்தகாரத்தினின்றும், பவப்பேய் அடிமைத் தனத்தி னின்றும், சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன் 2.ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீன மாக்கி வைத்தேன்; பாத்ரமதாய் அதை பாவித்துக்கொள்ளக் காத்திருக்கிறேன், கருணைசெய்,தேவா 3.நீதியி னாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேன் உமக்கு; ஜோதி பரிசுத்த ராலய மாகவே சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Jeevapaliyaay Oppuvitthaen, Aerruk Kollum, Yesuvae. Annai Thanthai Undham Sannathi Munninru Sonna Vaakkutthattha Mallaathu, Ippothu. - Ennai 1.andhakaaratthininrum, Pavappaey Atimaith Thanatthi Ninrum, Sondha Ratthak Kirayatthaal Enaimeetta Enthaiyae, Undhanukkitho! Pataikkiraen 2.aathma Sareeramathai Umakku Aatheena Maakki Vaitthaen; Paathramathaay Athai Paavitthukkollak Kaatthirukkiraen, Karunaisey,thaevaa 3.neethiyi Naayudhamaay Avayavam Naernthu Vittaen Umakku; Jothi Parisuttha Raalaya Maagavae Sondhamaayth Thanthaen Endran Sareeratthai