பாடல் #1654
ஏற்றுக் கொள்ளும்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
ஏற்றுக் கொள்ளும், யேசுவே. அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று சொன்ன வாக்கத்தத்த மல்லாது, இப்போது - என்னை அந்தகாரத்தி னின்றும், பவப் பேய் அடிமைத் தனத்தி னின்றும் சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன் - என்னை ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீன மாக்கி வைத்தேன். பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக் காத்திருக்கின்றேன், கருணைசெய், தேவா - என்னை நீதியி னாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேன் உமக்கு, ஜோதி பரிசுத்த ராலய மாகவே சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை - என்னை