பாடல் #164
ஜெகமதில் உதித்த ஜெய
🔤 Jegamathil Uthittha Jeya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே நரர்சேயர்கள் துதித்திடும் திருவடியே - 2 பாரில் பரனாக நீரே - பாவிகட்காய்ப் பலியானீர் அன்பால் என்னை ஆட்கொண்டானே அதிரூப சுந்தரனே - 2 1. பாவயிருள் நீக்கப் பாரினிலே - பரன் பாவிகள் பாவம் போக்க பலியானீரோ? சாபத்தை முற்றும் தொலைத்திடவே - சக்தியாக உயிர்திட்டிரோ - 2 அரூபா சொரூப அற்புதரே ஆனந்த பொற்பரனே - 2 2. எந்தனின் நீதியெல்லாம் கந்தையல்லோ - நீர் என்தனின் சிறப்பான தாரகமே அன்பே ஆனந்தப் பேரொளியே அதியந்தமில்லாப்பரனே கதியே நிதியே கருணாகரா காத்திடும் புகலிடமே - 2 3. ஏழையென்னில் தாகம் கொண்டதாலே – எழில் ஏகனே எனக்கு திவ்யாகாரமே தாகமிஞ்சி வாடுகிறேன் தேவா - சோகமானேன் இத்தாரணியில் - 2 காசினியில் நேசரைப் போல் காணுவேனோ கர்த்தராம் இயேசுவை போல் - 2 4. எப்போ உம்மைக் கண்டு மகிழ்ந்திடுவேன் - அண்ணல் இயேசுவே இன்பமாக மா தேவனே (மணாளனே) கன்மலைவெடிப்பில் தங்குமென் உத்தமனே என்றழைக்கும் சத்தம் - 2 கேட்கும் கீதம் ஆ ! இன்பமே கூறிடாயோ அன்பரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jegamathil Uthittha Jeya Jothiyae Nararsaeyarkal Thuthitthitum Thiruvatiyae - 2 Paaril Paranaaga Neerae - Paavigatkaayp Paliyaaneer Anpaal Ennai Aatkontaanae Athirooba Sundharanae - 2 1. Paavayirul Neekkap Paarinilae - Paran Paavigal Paavam Pokka Paliyaaneero? Saabatthai Murrum Tholaitthidavae - Sakthiyaaga Uyirthittiro - 2 Aroopaa Sorooba Arpudharae Aanandha Porparanae - 2 2. Endhanin Neethiyellaam Kanthaiyallo - Neer Enthanin Sirappaana Thaarakamae Anpae Aanandhap Paeroliyae Athiyandhamillaapparanae Kathiyae Nithiyae Karunaagaraa Kaatthitum Pugalidamae - 2 3. Aezhaiyennil Thaagam Kondathaalae – Ezhil Aeganae Enakku Thivyaakaaramae Thaagaminjsi Vaatukiraen Thaevaa - Sogamaanaen Itthaaraniyil - 2 Kaasiniyil Naesaraip Pol Kaanuvaeno Karttharaam Yesuvai Pol - 2 4. Eppo Ummaik Kantu Makizhnthituvaen - Annal Yesuvae Inbamaaga Maa Devanae (manaalanae) Kanmalaivetippil Thangkumen Utthamanae Endrazhaikkum Sattham - 2 Kaetkum Keedham Aa ! Inbamae Kooritaayo Anbarae - 2