பாடல் #163
நான் ஒருபோதும் உன்னை
🔤 Naan Orupothum Unnai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சா்ப்பங்களோ சிங்கக் கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுரை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை - 2 1) ஆறுதல் தர ஒரு வார்த்தையில்லை என்ன வந்தாலும் பயமேயில்லை மாறாத நேசா் உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவா் புயலில் என் கண்மலையே 2) நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் உயா்த்திடுமே நல் வசனத்தின் வல்லமையாய் வல்லவரின் சமூகம் நிறைந்திடுமே எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Orupothum Unnai Kaivituvathillai Enrurai Seythaenanro Katal Aazhatthilum Akkini Soolaiyilum Unnai Kaatthitum Pelavaananro Visha Saa்ppanggalo Singgak Koottanggalo Payam Vaentaam Un Arukil Naan Enrurai Seythavarai Aaraathippom Aaviyil Aaraadhanai - 2 1) Aarudhal Thara Oru Vaartthaiyillai Enna Vanthaalum Payamaeyillai Maaraadha Naesaa் Untenakku Manathu Orupothum Kalanggavillaiyae Aezhai Enakku Ataikkalamae Avaa் Puyalil En Kanmalaiyae 2) Ninthaigal Unnai Soozhkindratho Tham Karanggal Enrum Uyaa்tthitumae Nal Vasanatthin Vallamaiyaay Vallavarin Samoogam Nirainthitumae Eliyaavin Devan Engkae Endra Arpudham Natatthitumae