பாடல் #1627
என்னாலுரைக்க
🔤 Ennaaluraikka
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னாலுரைக்க முடியாதே - என்றன் இருதய மகிழ்ச்சி இப்போதே. முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை. - என் 1.காட்டினில் அலைந்த ஆடு நானே, - எனைக் கண்டு பிடித்தவர் யேசு கோனே; வீட்டினுள் மகிமையைக் கண்டேனே, - இனி வியந்து விரைந்து பாடுவேனே. நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே. - என் 2.பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே, - பாவப் பயங்கள் சந்தேகந் தொலைத்தாரே, ஆவல் ஆசையும் அகற்றினாரே, - தேவ அன்பினை அகத்துள் ஊற்றினாரே; தேவ வசனங்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க, ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும். - என் 3.சத்துருவினால் விளைந்த கேட்டை - எல்லாம் தாண்டிவந்தேன், யேசு பெருங்கோட்டை, பத்தருக் காயத்தம் செய்த வீட்டைப் - பெறப் பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை; இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத் தத்தம் செய்துவிட்டேன், அவர் தஞ்சமே காவில் தான் அஞ்சிடேனே இனி. - என் 4.ஆசை மிகும் யேசு பெருமானே! - பதி னாயிரம் பேரில் சிறந்த கோனே! வாச லீலிப்பூவே சீவதேனே! - வான மன்னாவே இலங்கு கதிரோனே! மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழும்பும் நேசத்தால் மகிழ்ந்தென்றென்றும் நீடுவாய் கிருபைகள் சூடுவாய் தோத்திரம். - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaaluraikka Mutiyaathae - Endran Irudhaya Makizhchsi Ippothae. Munnaalae Paavatthuyaril Moozhkina Paethaiyai Yaesu Mannavanaar Thaetikkantu Maarrinaar Pavatthinai, Thaerrinaar Agatthinai. - En 1.kaattinil Alaindha Aatu Naanae, - Enaik Kantu Pititthavar Yaesu Konae; Veettinul Makimaiyaik Kantaenae, - Ini Viyanthu Virainthu Paatuvaenae. Naattinil Enaitthodar Onaay Puli Yaavum Veruntu Ottampitith Thappaalae Ninrurritho Paartthena Verri Atainthaenae. - En 2.paavanggal Anaitthum Mannitthaarae, - Paavap Payanggal Santhaegan Tholaitthaarae, Aaval Aasaiyum Agarrinaarae, - Thaeva Anpinai Agatthul Oorrinaarae; Thaeva Vasanangsezhikkach Sebatthiyaananggal Sirakka, Aavi Ullilaegalikka Aatuthae Kaalkalum Paatuthae Naavathum. - En 3.satthuruvinaal Vilaindha Kaettai - Ellaam Thaantivanthaen, Yaesu Perungkottai, Pattharuk Kaayattham Seytha Veettaip - Perap Paartthirukkinraen Parama Naattai; Ittharai Vasikkung Kaalam Atthanaiyum Yaesukkenaith Thattham Seythuvittaen, Avar Thanjjamae Kaavil Thaan Anjsitaenae Ini. - En 4.aasai Mikum Yaesu Perumaanae! - Pathi Naayiram Paeril Sirandha Konae! Vaasa Leelippoovae Seevathaenae! - Vaana Mannaavae Ilangku Kathironae! Maasarakkazhuvi Endhan Manathul Vasitthezhumpum Naesatthaal Makizhnthenrenrum Neetuvaay Kirupaigal Sootuvaay Thotthiram. - En