பாடல் #1615
என்ன அன்னியோந்நியம் என்ன ஆனந்தம்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. என்ன அன்னியோந்நியம் என்ன ஆனந்தம்! நித்ய புயத்திலே சாயுங்கால் என்ன பாக்கியம் என்ன ஆறுதல் நித்ய புயத்திலே சாயுங்கால். நித்ய புயத்தில் பயமில்லாமல் சாயுவேன் நித்ய புயமே பெரும் அடைக்கலம் எனக்கு. 2. என்ன மகத்வம் மோட்ச பயணம்! நித்ய புயத்திலே சாயுங்கால் எத்னை தெளிவு யாத்ரை நற்பாதை! நித்ய புயத்திலே சாயுங்கால். நித்ய புயத்தில் பயமில்லாமல் சாயுவேன் நித்ய புயமே பெரும் அடைக்கலம் எனக்கு. 3. பயம் எனக்கேன்? அச்சம் எனக்கேன்? நித்ய புயத்திலே சாயுங்கால் மெய்ச் சமாதானம் உண்டு எனக்கு நித்ய புயத்திலே சாயுங்கால். நித்ய புயத்தில் பயமில்லாமல் சாயுவேன் நித்ய புயமே பெரும் அடைக்கலம் எனக்கு.