பாடல் #1614
என்தன் பரம குரு
🔤 Enthan Parama Kuru
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்தன் பரம குரு செய்த உபகாரத்தை ஏத்தித் துதிப்பேன் நானே. தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச் சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான - என் 1. வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத மகிமைப்ர தாபம் மிகுத் தோன் - அதி ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த யாவும் நெறியில் பகுத்தோன் மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின் விளங்கும் அனந்த சுகத்தோன் - அக்கி யானத் திருள் அகலத்தான் இப்புவியில் உற்ற அந்த முடிவில்லாத சுந்தர கிறிஸ்துநாத- என் 2. மிக்கப் பராபரனோ டொக்க ஒன்றித்திரந்த முக்கியம் அனைத்தும் விடுத்து - ஏவை மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில் மனுடாவதாரம் எடுத்து பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டரும் பாடு பட்டுயிர் கொடுத்து - நரர் அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து 3. பாவத் திகில் அறுத்துச்,சாபத்தையும் தொலைத்து பகைஞன் வினையை நீக்கிக் - கொடும் ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த அடிமைகளைக் கைதூக்கி தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத் திருவுள மாய் உண்டாக்கி - நித்தம் மாபத்தி ரமாய்ப் பிரதாபித் தனுக்ர கித்து வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enthan Parama Kuru Seytha Ubakaaratthai Aetthith Thuthippaen Naanae. Thanthaip Paranidatthaa Nandhath Thoni Vilanggach Satthamaaga Nindra Nitthiya Vasthuvaana - En 1. Vaanath Thamalar Saenai Kirakitthu Mutiyaadha Makimaipra Thaabam Mikuth Thon - Athi Njaanatthudan Ulakum, Paramum, Athil Niraindha Yaavum Neriyil Pakutthon Maenmai Porula Thaagath Thaeva Makatthuvatthin Vilangkum Anandha Sugatthon - Akki Yaanath Thirul Agalatthaan Ippuviyil Urtra Andha Mutivillaadha Sundhara Kiristhunaadha- En 2. Mikkap Paraabarano Tokka Onritthirandha Mukkiyam Anaitthum Vitutthu - Aevai Makkal Thuyar Agalath Thukka Ulakamathil Manutaavathaaram Etutthu Pakshamaaga Atimaik Kolam Kondarum Paatu Pattuyir Kotutthu - Narar Akkiramam Anaitthum Nikkirakam Purinthu Andhakaaram Ara Vandha Yaesukiristhu 3. Paavath Thikil Arutthuch,saabatthaiyum Tholaitthu Pakainjan Vinaiyai Neekkik - Kotum Aabatthilum, Adarndha Kobatthilum Vizhundha Atimaigalaik Kaithookki Thaevatthiraviyam Endra Jeeva Pojanatthaith Thiruvula Maay Untaakki - Nittham Maabatthi Ramaayp Pirathaapith Thanukra Kitthu Vaitthuk Kaattha Orae Nitthiya Thirithvamaana