பாடல் #1613
என்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக
🔤 Enthan Jeevan Yesuvae Sondhamaaga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும் என்தன் கை பேரன்பினால் ஏவப்படும்;என்தன் கால் சேவை செய்ய விரையும் அழகாக விளங்கும் என்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும்; என்வாய் மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும் என்தன் ஆஸ்தி தேவரீர் முற்றும் அங்கீகரிப்பீர் புத்தி கல்வி யாவையும் சித்தம் போல் பிரயோகியும் என்தன் சித்தம் இயேசுவே ஒப்புவித்துவிட்டேனே; என்தன் நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம் ஆளுவீர் திருப்பாதம் பற்றினேன் என்தன் நேசம் ஊற்றினேன் என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enthan Jeevan Yesuvae Sondhamaaga Aalumae Endhan Kaalam Naeramum Neer Kaiyaatiyarulum Enthan Kai Paeranpinaal Aevappatum;enthan Kaal Saevai Seyya Viraiyum Azhakaaga Vilangkum Enthan Naavu Inbamaay Ummaip Paadavum; Envaay Meetpin Seythi Kooravum Aethuvaakkiyarulum Enthan Aasthi Thaevareer Murrum Angkeegarippeer Putthi Kalvi Yaavaiyum Sittham Pol Pirayokiyum Enthan Sittham Yesuvae Oppuvitthuvittaenae; Enthan Nenjsil Thangkuveer Athai Nittham Aaluveer Thiruppaadham Parrinaen Enthan Naesam Oorrinaen Ennaiyae Samoolamaay Thattham Seythaen Nitthamaay