பாடல் #1612
என்தன் ஆத்ம நேசரே
🔤 Enthan Aathma Naesarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என்தன் ஆத்ம நேசரே, வெள்ளம் போன்ற துன்பத்தில், தாசன் திக்கில்லாமலே தடுமாறிப் போகையில், தஞ்சம் தந்து, இயேசுவே, திவ்விய மாஅர்பில் காருமேன்; அப்பால் கரையேற்றிய மோட்ச வீட்டில் சேருமேன். 2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன்; கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன்; நீரே என்தன் நம்பிக்கை, நீர் சகாயம் செய்குவீர்; ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர். 3. குறை யாவும் நீக்கிட, நாதா, நீர் சம்பூரணர்; திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர்; நான் அசுத்த பாவிதான், நீரோ தூயர் தூயரே; நான் அநீதி கேடுள்ளான், நீர் நிறைந்த நித்தியரே. 4. பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர் என்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவீர்; ஜீவ ஊற்றாம் இயேசுவே, என்தன் தாகம் தீருமேன், ஸ்வாமீ, என்றும் என்னிலே நீர் சுரந்து ஊற்றுமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Enthan Aathma Naesarae, Vellam Pondra Thunbatthil, Thaasan Thikkillaamalae Thatumaarip Pokaiyil, Thanjjam Thanthu, Yesuvae, Thivviya Maaarpil Kaarumaen; Appaal Karaiyaerriya Motsa Veettil Saerumaen. 2. Valla Thaevareer Allaal Vaerae Thanjjam Ariyaen; Kaivitaamal Naesatthaal Aarrith Thaerrith Thaangkumaen; Neerae Enthan Nampikkai, Neer Sakaayam Seykuveer; Aethumartra Aezhaiyai Settaiyaalae Mootuveer. 3. Kurai Yaavum Neekkida, Naathaa, Neer Sampooranar; Thikkarroraith Thaangkida Neerae Maa Thayaabarar; Naan Asuttha Paavithaan, Neero Thooyar Thooyarae; Naan Aneethi Kaetullaan, Neer Niraindha Nitthiyarae. 4. Paavam Yaavum Mannikka Aararul Amaindha Neer Ennaich Sutthigarikka Arul Paayach Seykuveer; Jeeva Oorraam Yesuvae, Enthan Thaagam Theerumaen, Svaamee, Enrum Ennilae Neer Suranthu Oorrumaen