பாடல் #16014
ஜெபம் வேண்டுமே ஜெபம் வேண்டுமே
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
ஜெபம் வேண்டுமே ஜெபம் வேண்டுமே ஜெபமில்லா வாழ்வு சவமாகுமே - 2 ஜெயித்தவர் யாரும் தோற்றதில்லை ஜெபிக்காத மனிதர் ஜெயித்ததில்லை - 2 ஜெபமில்லா வாழ்வு நிலைத்ததில்லை - 2 நிலைத்திட்ட வாழ்வு அழிந்ததில்லை - 2 பரலோக ராஜ்யம் பேச்சிலல்ல ஜெபிக்கும் மனிதர் முழங்காலிலுண்டு - 2 துன்மார்க்க உலகம் திருந்திடவே - 2 இயேசுவின் அன்பை அறிந்திடவே - இரட்சகர் - 2 இயேசுவைப் போல ஜெபித்திடுவோம் பிசாசின் கையினின்று உலகை பறித்திடுவோம் - 2 பரிசுத்த கூட்டமாய் மாற்றிடுவோம் - 2 பரலோகம் நோக்கி பறந்திடுவோம் - நாம்