பாடல் #16007
வானாதி வானவர் வான் புவி போற்றும்
🔤 Vaanaathi Vaanavar Vaan Puvi Porrum
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானாதி வானவர் வான் புவி போற்றும் இயேசு பிறந்தாரே விண்ணகம் விட்டு அதிசயமாக மண்ணில் உதித்தாரே பிறந்தாரே உலகில் இயேசு பிறந்தாரே உதித்தாரே உன்னதர் மண்ணில் உதித்தாரே கொண்டாட்டமே உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே ஆனந்தமே மனுக்குல வாழ்வில் ஆனந்தமே இருளில் வாழுகின்ற மாந்தரை மீட்டிடவே ஒளியானவர் இயேசு உலகின் ஒளியாய் உதித்தாரே பாவத்தில் மாளுகின்ற தம் ஜனங்களின் பாவங்களை நீக்கி ரட்சிக்கவே இயேசு இரட்சகர் பிறந்தாரே - ஏழைப் பங்காளனாய் எளியோரின் ஆண்டவராய் மாட்டுத் தொழுவத்திலே மன்னன் இயேசு உதித்தாரே மண்ணான மானிடர்க்கு பொன்னான வாழ்வுதர விண்ணாளும் வேந்தனவர் புவியில் பிறந்தாரே பாலகன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் என்றும் அவர் தோளின் மேலிருக்கும் அவர் நாமம் அதிசயமாம் அவர் ஆலோசனை கர்த்தராம் வல்லவர் நித்திய பிதா சமாதானப் பிரபுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanaathi Vaanavar Vaan Puvi Porrum Yesu Piranthaarae Vinnakam Vittu Athisayamaaga Mannil Uthitthaarae Piranthaarae Ulakil Yesu Piranthaarae Uthitthaarae Unnathar Mannil Uthitthaarae Kontaattamae Ulakengkum Kiristhumas Kontaattamae Aanandhamae Manukkula Vaazhvil Aanandhamae Irulil Vaazhukindra Maandharai Meettidavae Oliyaanavar Yesu Ulakin Oliyaay Uthitthaarae Paavatthil Maalukindra Tham Jananggalin Paavanggalai Neekki Ratsikkavae Yesu Iratsakar Piranthaarae - Aezhaip Pangkaalanaay Eliyorin Aandavaraay Maattuth Thozhuvatthilae Mannan Yesu Uthitthaarae Mannaana Maanidarkku Ponnaana Vaazhvudhara Vinnaalum Vaendhanavar Puviyil Piranthaarae Paalakan Piranthaar Namakkoru Kumaaran Kotukkappattaar Kartthatthuvam Enrum Avar Tholin Maelirukkum Avar Naamam Athisayamaam Avar Aalosanai Karttharaam Vallavar Nitthiya Pithaa Samaathaanap Pirapuvae