பாடல் #15985
துதிகளின் மத்தியில் வாசம் செய்வரே
🔤 Thuthigalin Matthiyil Vaasam Seyvarae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் மத்தியில் வாசம் செய்வரே தூதர்கள் போற்றும் எங்கள் தூயவரே துதிக்கும் பாத்திரம் என்றும் நீர்தானே துதி கன மகிமை என்றும் உமக்குத்தானே இயேசையா - 2 உம்மை துதிக்கிறோம் தொழுகிறோம் துதிக்கு பாத்திரரே நல்லவரே வல்லவரே வாழ்வு தந்தவரே கேரூபின் சேராபீன்கள் உன்னதத்தில் உம்மை துதித்திட கோடான கோடி தூதர் உம்மை புகழ்ந்து பாடிட மகிமையில் வாசம் செய்யும் மன்னவரும் நீர்தானே சேனைகளின் கர்த்தராம் பரிசுத்தரும் நீர்தானே பவுலும் சீலாவும் இரவில் சிறையில் துதித்ததால் அஸ்திபாரம் அசைந்து கதவு திறந்து கட்டுகள் கழன்றது ! துதித்தால் விடுதலை கொடுப்பவர் நீர்தானே கட்டுகளை அறுத்திடும் துதிகளின் நாயகனே மரண இருள் பள்ளத்தாக்கில் நடந்த வேளையில் மேய்ப்பனே கோலும் தடியும் கொண்டு என்னை நடத்தினீர் உன்னதரே உம்மன்பு உலகினில் பெரியது உத்தமரே உம் பாசம் உறவுகளில் சிறந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Matthiyil Vaasam Seyvarae Thoodharkal Porrum Enggal Thooyavarae Thuthikkum Paatthiram Enrum Neerthaanae Thuthi Kana Makimai Enrum Umakkutthaanae Yesaiyaa - 2 Ummai Thuthikkirom Thozhukirom Thuthikku Paatthirarae Nallavarae Vallavarae Vaazhvu Thandhavarae Kaeroopin Saeraapeenkal Unnathatthil Ummai Thuthitthida Kotaana Koti Thoodhar Ummai Pugazhnthu Paatida Makimaiyil Vaasam Seyyum Mannavarum Neerthaanae Saenaigalin Karttharaam Parisuttharum Neerthaanae Pavulum Seelaavum Iravil Siraiyil Thuthitthathaal Asthipaaram Asainthu Kathavu Thiranthu Kattugal Kazhandrathu ! Thuthitthaal Vitudhalai Kotuppavar Neerthaanae Kattugalai Arutthitum Thuthigalin Naayakanae Marana Irul Pallatthaakkil Natandha Vaelaiyil Maeyppanae Kolum Thatiyum Kontu Ennai Natatthineer Unnatharae Ummanpu Ulakinil Periyathu Utthamarae Um Paasam Uravugalil Sirandhathu