பாடல் #15977
உயிரினும் மேலான
🔤 Uyirinum Maelaana
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரினும் மேலான என் உன்னதர் இயேசுவையே என் உயிருள்ள நாள் வரைக்கும் நான் உயர்த்தி பாடிடுவேன் பாடுவேன் பாடுவேன் அவரைப் பாடுவேன் போற்றுவேன் இயேசுவைப் போற்றுவேன் கர்த்தர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம் அத்தனைக்கும் நன்றி சொன்னால் ஆயுள் பல செலவாகும் உயிர் வாழும் நாட்களெல்லாம் நன்றி சொல்லும் மனம் வேண்டும் கண்ணீரோடு எப்போதும் அவர் பாதம் தொழ வேண்டும் - நித்திய ஜீவன் தந்தார் நிரந்தர அமைதி தந்தார் தித்திக்கும் அவர் பெயரை எத்திக்கும் பாடவைத்தார் எட்டி எட்டி போன என்னைச் சுற்றி சுற்றி தேடி வந்தார் சத்தியம் பற்றிக்கொண்டு வாழ்ந்திடக் கற்றுத் தந்தார் அவரே என் தாபரம் நிலையான வாசஸ்தலம் எப்போதும் நான் தங்கும் என் அன்பின் அடைக்கலம் ஆபத்துக் காலத்திலே நான் நம்பும் நங்கூரம் அவர் புகழ் பாடுவேன் ஓயாமல் எப்போதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirinum Maelaana En Unnathar Yesuvaiyae En Uyirulla Naal Varaikkum Naan Uyartthi Paatituvaen Paatuvaen Paatuvaen Avaraip Paatuvaen Porruvaen Yesuvaip Porruvaen Kartthar Seytha Nanmaigal En Vaazhvil Aeraalam Atthanaikkum Nanri Sonnaal Aayul Pala Selavaakum Uyir Vaazhum Naatkalellaam Nanri Sollum Manam Vaentum Kanneerotu Eppothum Avar Paadham Thozha Vaentum - Nitthiya Jeevan Thanthaar Nirandhara Amaithi Thanthaar Thitthikkum Avar Peyarai Etthikkum Paadavaitthaar Etti Etti Pona Ennaich Surri Surri Thaeti Vanthaar Satthiyam Parrikkontu Vaazhnthidak Karruth Thanthaar Avarae En Thaabaram Nilaiyaana Vaasasthalam Eppothum Naan Thangkum En Anpin Ataikkalam Aabatthuk Kaalatthilae Naan Nampum Nangkooram Avar Pugazh Paatuvaen Oyaamal Eppothum